காட்டு தீ அதிகரித்து வருவதால் தீ ஜூவாலையில் மலைகள் அருகில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றம்
கனடாவில் காட்டுத் தீ அதிகரித்து வருவதால், கெலோவ்னா நகரைச் சுற்றியுள்ள மலைகளில் உள்ள மரங்கள், அரியவகை தாவரங்கள் இரவிலும் எரிகின்றன.
வான்கூவரில் இருந்து கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரமான கெலோவ்னாவைச் சுற்றியுள்ள மலைகளிலும் தீ பரவ தொடங்கி உள்ளது.
இங்கு தீ அதிகரித்து இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க பெரும் போராட்டத்தில ஈடுபட்டுள்ளனர். குட்டி விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பேரிடர் படையினருக்கு ஏதுவாக அங்குள்ள வான்வழி மூடப்பட்டுள்ளது.
தீயின் வேகம் அதிகரித்து இருப்பதால் அருகில் வசிப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Comments