உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்கள் வழங்கப்படும் நெதர்லாந்து மற்றும் டென்மார்க் பிரதமர்கள்
ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வரும் உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்கள் வழங்கப்படும் என நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகள் உறுதி அளித்துள்ளன.
அரசுமுறை பயணமாக நெதர்லாந்து சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அந்த நாட்டு பிரதமர் மார்க் ரூட்டை என்தோவன் ராணுவ தளத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது நெதர்லாந்தில் 42 எப்-16 ரக விமானங்கள் இருப்பதாகவும் அதில் எத்தனை உக்ரைனுக்கு வழங்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக அளித்த பேட்டியில் இது உக்ரைனின் வான் கவசத்தை வலுப்படுத்துவதற்கான மற்றொரு படியாகும் என ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இதையடுத்து டென்மார்க் சென்ற உக்ரைன் அதிபரை டென்மார்க்கின் பிரதமர் Mette Frederiksen, பட்டத்து இளவரசி மேரி மற்றும் அதிகாரிகள் வரவேற்பளித்தனர்.
எப் -16 ரக விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து நெதர்லாந்து மற்றும் டென்மார்க் அதனை உறுதி செய்துள்ளன.
Comments