உலக தடகளம் 100 மீ. ஓட்டத்தில் பந்தய தூரத்தை 9.83 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார் அமெரிக்கர்

0 4362

ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 9 புள்ளி 83 வினாடிகளில் கடந்து அமெரிக்க வீரர் நோவா லைலெஸ் தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார்....

இதேபோன்று 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உகாண்டா வீரர் ஜோஸ்வா சேப்டகி சக போட்டியாளர்களை விட 25 அடி தூரம் முன்பாக வந்து தங்கப்பதக்கம் வென்றார்.....

இந்த தடகள போட்டியில் மகளிர் நீளம் தாண்டுதலில் செர்பிய வீராங்கனை இவனா வுலேட்டா Ivana Vuleta 7 புள்ளி 14 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்தார்....

இதே போன்று ஆடவர் சுத்தி எறிதல் போட்டியில் கனடவின் எதான் கட்ஸ்பெர்க் 81 புள்ளி 25 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். போலந்து மற்றும் ஹங்கேரி வீரர்கள் இரண்டு மற்றும் 3-ம் இடத்தை பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments