பீகாரின் பாட்னாவில் இருந்து சென்ற ரயிலில் பயணம் செய்த பயணிகள் இருவர் திடீரென உயிரிழப்பு

0 1112

பீகாரின் பாட்னாவில் இருந்து சென்ற ரயிலில் பயணம் செய்த பயணிகள் இருவர் திடீரென உயிரிழந்தனர்.

ராஜஸ்தானில் உள்ள கோட்டா என்ற இடத்திற்குச் சென்ற அந்த ரயிலில் சத்தீஸ்கரைச் சேர்ந்த 90 பேர் கொண்ட குழுவினர் பயணம் செய்தனர். இந்நிலையில் அந்தப் பயணிகளில் சிலரு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பயணிகளை ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அதில் இருவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

மேலும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 6 பேர் ஆக்ராவில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் உயிரிழப்புக்கு உணவில் விஷம் கலந்ததா அல்லது நீர்ச்சத்து குறைபாடு காரணமா என உடற்கூராய்வுக்குப் பின்னரே தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments