லடாக்கில் ராகுல் சுற்றுப்பயணம் - சீனா இந்தியா நிலத்தை அபகரித்ததாக புகார்
இந்திய நிலத்தை சீனா அபகரித்துள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலளித்துள்ளது.
இந்தியாவின் ஒருபிடி நிலத்தைக்கூட சீனா எடுக்கவில்லை என்று பிரதமர் கூறி வருவது தவறானது என்று லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி கூறியிருந்தார்.
சீனா இந்திய நிலத்தை அபகரித்து விட்டதாகவும் அங்கு இந்தியர்கள் தங்கள் கால்நடைகளை மேய அனுமதிக்கப்படவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் ராகுல் காந்தி கூறியது முற்றிலும் தவறானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்லைப் பகுதிக்கு செல்லும் போதெல்லாம் இந்தியாவுக்கு எதிராகவும் சீனாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவிப்பது ராகுல் காந்திக்கு வழக்கமாகி விட்டது என்றும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
Comments