மழைத் தட்டுப்பாடு காரணமாக பருப்புகளின் உற்பத்தி குறைந்ததால் விலை உயரும் அபாயம்
காய்கறிகளின் விலையைக் கட்டுக்குள் வைக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தக்காளியை சலுகை விலையில் விற்பனைக்கு வைத்ததால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிலோ 260 ரூபாய்க்கு விற்ற தக்காளி இப்போது நூறு ரூபாய்க்கும் குறைவாக விற்கப்படுகிறது.
வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவீதம் உயர்த்தி, இன்றுமுதல் வெளிச்சந்தையில் கிலோ 25 ரூபாய்க்கு விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் மறுபுறம், மழை குறைந்தது காரணமாக தானியங்களை விதைப்பது பாதிக்கப்பட்டுள்ளதால், பருப்பு விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
துவரம் பருப்பு கடலைப்பருப்பு விலை கடந்த ஜூலை மாதம் முதலே ஏறுமுகமாகவே உள்ளதால் இதன் விலை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.
Comments