காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மீண்டும் முறைப்படி முறையீடு

0 910

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை அவசரமாக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று முறைப்படி முறையிட உள்ளது.

வினாடிக்கு, 24 ஆயிரம் கனஅடிக்கு பதிலாக, 10 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மற்றும் குமணன் ஆகியோர் கடந்த 18ம் தேதி முறையிட்டனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தை விசாரிக்க புதிய நீதிபதி அமர்வை நியமிக்க வேண்டுமென்பதால், 21ம் தேதி முறைப்படி முறையிடுமாறு உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் இன்று முறைப்படி முறையிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு எப்போது, எந்த அமர்வில் விசாரணைக்கு வரும் என்பது அறிவிக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments