புகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றத் திட்டம்.. ஜப்பான் அரசின் முடிவுக்கு உலக நாடுகள், இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு.. !!
புகுஷிமா அணு உலை கழிவு நீர், பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றப்படுவதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அந்த அணு உலையில் ஜப்பான் பிரதமர் கிஷிடா ஆய்வு மேற்கொண்டார்.
2011-ம் ஆண்டு சுனாமி பேரலையால் சேதமடைந்த அணு உலையின் கழிவு நீரில், டிரிட்டியம் என்ற தனிமத்தை தவிர மற்ற அனைத்து கதிர்வீச்சு தனிமங்களையும் அகற்றிவிடப்படும் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
இருந்தபோதும் தென் கொரியா, சீனா போன்ற நாடுகள் ஜப்பானிலிருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளன.
கதிர்வீச்சு நீரை சுத்திகரிக்கும் பணிகளை பார்வையிட்ட பிரதமர் கிஷிடா, எப்போது பசிபிக் பெருங்கடலில் அது வெளியேற்றப்படும் என்பது குறித்து மெளனம் காத்துவருகிறார்.
Comments