ரஷ்ய விண்கலமான லூனா-25வில் திடீர் கோளாறு... தரையிறங்குவதற்கான இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல்
நிலவின் தென்துருவத்தில் தரை இறங்குவதற்காக அனுப்பப்பட்ட ரஷ்ய விண்கலமான லூனாவில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 10ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்ட லூனா-25 என்ற இந்த விண்கலம் கடந்த 17-ந்தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது.
அதன் சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அந்த விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கான இறுதி கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இறுதி சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்ப முடியாமல், தற்போதைய பாதையிலேயே லூனா-25 விண்கலம் சுற்றி வருகிறது.
இதனை அடுத்து விண்கலத்தின் அவசர நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும், விண்கலத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறை விரைந்து சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் ரஷிய விண்வெளி நிறுவனமான ராஸ்கோஸ்மோஸ் தகவல் தெரிவித்து உள்ளது.
Comments