மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது சுவீடன்

0 1905

மகளிர் உலகக்கோப்பை கால்பந்தில், மூன்றாவது இடத்திற்கான போட்டியில், ஆஸ்திரேலிய அணியை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் சுவீடன் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.

இப்போட்டித் தொடரில் முதன்முறையாக அரையிறுதி வரை முன்னேறிய ஆஸ்திரேலிய அணி, உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் களமிறங்கியது.

இருந்தபோதும் ஆட்டம் தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய சுவீடன் வீராங்கனைகள், 30 மற்றும் 62வது நிமிடங்களில் கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் சுவீடன் வீராங்கனைகளுக்கு வெண்கல பதக்கத்தை வழங்கி கெளரவித்தார்.

இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், ஸ்பெயினும் மோத உள்ள நிலையில், இந்த உலகக்கோப்பையில் முதல் 3 இடங்களும் ஐரோப்பிய நாடுகள் வசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments