ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இணையவழி மருத்துவ ஆலோசனைப் பிரிவு தொடக்கம்
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதல்முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இணையவழி மருத்துவ ஆலோசனைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு நேரில் வர இயலாதோருக்காக தொடங்கப்பட்ட இந்த சேவையை, திங்கள் முதல் சனிக் கிழமை வரை, காலை 9 முதல் 12 மணி வரை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகள் இந்த சேவையைப் பெற, teleconsultation.s10safecare.com என்ற இணைப்பில் வரும் படிவத்தில் தங்களின் பெயர், வயது, பாலினம், அலைபேசி எண், முகவரியைப் பதிவிட்டால் போதும்; வீடியோ கால் வாயிலாக மூத்த மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்குவார்கள்.
நபர் ஒருவர் தலா 5 நிமிடங்கள் வரை மருத்துவ ஆலோசனைகளைப் பெற முடியும் என்று மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்தார்
Comments