காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதிலிருந்து பின்வாங்கியதற்காக ரூ.2,000 கோடி இழப்பீடு வழங்க விக்டோரியா மாநில அரசு முடிவு
காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதிலிருந்து பின்வாங்கியதற்காக இரண்டாயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசு முன்வந்துள்ளது.
2026ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடத்த விக்டோரியா மாநில அரசு திட்டமிட்டிருந்தது. செலவீனங்கள் 37 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டதால் போட்டிகளை நடத்தும் முடிவிலிருந்து கடந்த மாதம் பின்வாங்கியது.
இதற்காக காமன்வெல்த் போட்டி அமைப்பாளர்களுக்கு 2,000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்போவதாக விக்டோரியா மாநில அரசு தெரிவித்துள்ளது.
Comments