2021ல் தமிழ்நாட்டில் 2,300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டும் பதிவு மற்றும் 109 தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி -முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை மும்மடங்கு உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை கொடீசியா வளாகத்தில் தொடங்கியுள்ள 2 நாள் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழாவில் காணொலி வாயிலாக முதலமைச்சர் உரையாற்றினார்.
அப்போது, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், 109 நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் வீதிம் நிதி வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments