கோவையில் சாலைப் பணிகளை வெப்ப அளவீட்டு மானியின் மூலம் தாரின் தரத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்
கோவை மாநகராட்சியில் தார் சாலை அமைக்கப்படும் பணிகளை அம்மாநகராட்சி ஆணையர் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மத்திய மண்டலத்தின் 46-வது வார்டில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 1 கோடியே 81 லட்ச ரூபாய் செலவில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி நடைபெறும் இடத்துக்கு நள்ளிரவில் திடீரென அவர் சென்றிருந்தார்.
சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தாரை வெப்ப அளவீட்டு கருவி மூலம் சோதனையிட்ட அவர், சாலையின் நீளம், அகலம் குறித்தும் கேட்டறிந்தார்.
தற்போது அமைக்கப்படும் தார் சாலை தரமானதாகவும் உறுதியானதாகவும் நீண்ட நாட்கள் பொது மக்கள் பயன் பெரும் வகையில் அமைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.
Comments