சீனாவுக்கு அணுசக்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா கட்டுப்பாடு
சீனாவுக்கான அணுசக்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை அமெரிக்கா அதிகரித்துள்ளது.
சீனா மீதான உளவு குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள், அந்நாட்டின் தொழில்துறை கொள்கைகள், அமெரிக்கா மீதான ஏற்றுமதி தடைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவில் உள்ள அணுமின் நிலையங்களில் பயன்படுத்துவதற்காக குறிப்பிட்ட வகை ஜெனரேட்டர்கள் மற்றும் கொள்கலன்களை ஏற்றுமதி செய்ய சிறப்பு உரிமங்களைப் பெற வேண்டும் என அமெரிக்க வர்த்தகத் துறையின் ஒரு பிரிவான தொழில் மற்றும் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
Comments