உலகின் உயரமான சாலை, சுரங்கப்பாதை, விமான நிலையம் கிழக்கு லடாக் பகுதியில் கட்டப்பட்டு வருவதாக BRO தலைவர் தகவல்

0 1344

உலகின் மிக உயரமான சாலை, சுரங்கப்பாதை மற்றும் போர் விமானதளத்தை கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா உருவாக்கி வருவதாக எல்லை சாலைகள் அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உம்லாங் லா கணவாய் பகுதியில் மிக உயரமான சாலையை அமைத்ததன் மூலம் நிகழ்த்தப்பட்ட சாதனையைக் குறிப்பிட்டார்.

கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரத்து 400 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாலை ஏதேனும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டால் விரைவில் படைகளை அனுப்ப உதவும் எனக் குறிப்பிட்டார். மேலும், உலகின் மிக உயரமான இருவழிச் சுரங்கப்பாதையான சேலாவும் தயாராக இருப்பதாகவும், மிக விரைவில் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் சவுத்ரி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments