கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே ஒப்புதல்

0 3688

சென்னையை அடுத்த வண்டலூர்-ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க, நிர்வாக ரீதியான ஒப்புதலை தெற்கு ரயில்வே வழங்கியுள்ளது.

இதையடுத்து ரயில் நிலையத்துக்கான வரைபடம் தயாராகும் என்றும், அதற்கு ஒப்புதல் கிடைத்ததும், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 நடைமேடைகளை கொண்ட ரயில் நிலையத்தை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரயில் நிலையம் அமைந்துவிட்டால், அதே கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்துக்கு, சென்னை-வாசிகள் எளிதாக சென்றுவர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments