போலி பதிவெண் கொண்ட பைக்கில் சென்று 5 லிட்டர் சமையல் எண்ணெய் திருடிய ஆசாமிக்கு போலீஸ் வலை

0 1108

கடலூர் மாவட்டம் புவனகிரியில் போலி பதிவெண் கொண்ட பைக்கில் மளிகைக் கடைக்குச் சென்று 5 லிட்டர் சமையல் எண்ணெய், தேங்காய் எண்ணெய் என, கையில் கிடைத்ததையெல்லாம் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பரபரப்பாக வியாபாரம் நடந்து கொண்டிருந்த அந்தக் கடையில் ஊழியர்கள் யாரும் தன்னை கவனிக்காததை பயன்படுத்திக் கொண்ட திருட்டு ஆசாமி, முதலில் 5 லிட்டர் சமையல் எண்ணெய் மற்றும் தேவையானதை திருடி, பைக்கிலும் பையிலும் வைத்துக் கொண்டான்.

பிறகு 20 ரூபாய்க்கு சலவை பவுடர் மட்டும் வாங்குவது போல நாடகமாடிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
போலீசாரின் விசாரணையில் அந்த நபர் வந்த பைக்கின் பதிவு எண் போலியானது என்று தெரியவந்தது.

அவனை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments