கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு உள்ளூர்க்காரர்களிடம் ரூ.10; வடமாநிலத்தவரிடம் ரூ.20 கூடுதலாக கேட்பதாக புகார்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு 20 ரூபாய் அதிகமாக வசூலிக்கப் படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஏளாவூரில் உள்ள அந்த கடையில் மது வாங்க செல்வோரிடம் ஒரு மதுபாட்டிலுக்கு 10 ரூபாயும், வடமாநில இளைஞர்களிடம் 20 ரூபாயும் கூடுதலாக வசூலிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெயிண்டர் ஒருவர், தான் வாங்கிய பாட்டிலுக்கு ஏன் 10 ரூபாய் அதிகமாக எடுத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு கடையில் இருந்த விற்பனையாளர், 20 ரூபாய்க்கு பதிலாக 10 ரூபாய் மட்டுமே எடுத்திருப்பதாக கூறியதை, அவர் செல்போனில் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
Comments