இந்தியாவின் முதல் 3டி அஞ்சல் அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தார் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

0 5262

இந்தியாவில் முதல்முறையாக 3டி பிரிண்டிங் மூலம் கட்டப்பட்ட அஞ்சல் அலுவலக கட்டிடம் பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ஐ.ஐ.டி.யின் தொழில்நுட்ப உதவியுடன் எல் அன்ட் டி நிறுவனம் வெறும் 43 நாட்களில் இந்த கட்டிடத்தை கட்டி முடித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கட்டிடத்தை திறந்துவைத்து பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 3டி பிரிண்டிங் அஞ்சல் அலுவலக கட்டிடம் இந்தியாவின் தொழில்நுட்ப சக்தியை எடுத்துக்காட்டுவதாக கூறினார்.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சாத்தியமாகி இருப்பதற்கு, நாட்டில் தீர்க்கமான மற்றும் மக்களின் திறன் மீது நம்பிக்கை கொண்டுள்ள தலைமை அமைந்ததே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாரம்பரிய கட்டுமான முறைகளுக்கு மாறாக, முப்பரிமாண பிரிண்டிங் என்பது ரோபோட்டிக் கரத்தைக் கொண்டு கணினி மூலம் சிறப்பு கான்கிரீட் கலவையைப் பயன்படுத்தி கட்டிடத்தை அடுக்குகளாக உருவாக்குகிறது.

இதனால் 3டி பிரிண்டிங் மூலம் கட்டிடங்களை கட்ட குறைந்த காலமே ஆகும் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments