டீக்கடைகளில் சலூனில் நடந்த அரசியல் விவாதங்கள் சமூக ஊடகத்தில் நடக்கின்றன: முதலமைச்சர்

0 2080

டீக்கடைகளில், சலூன்களில் பேசப்பட்ட அரசியல் விவாதங்கள் இப்போது சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரில் தி.மு.க.வின் தென் மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், இண்டியா கூட்டணி வெற்றி பெறாவிட்டால் இந்தியாவை காப்பாற்ற முடியாது என்றார்.

தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வாக்குச்சாவடி முகவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முதலமைச்சர், தமிழகத்தை தி.மு.க. நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற கருணாநிதியின் கனவை நிறைவேற்றிக் காட்டுவோம் என்றும் கூறினார்.

பின்னர், ராமேஸ்வரம் அக்காள்மடம் சேதுபதி நகர் மீனவர் குடியிருப்புப் பகுதிக்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments