மலேசியாவில் சிறிய ரக விமானம் சாலையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்

0 1571

மலேசியாவில் சிறிய ரக விமானம் சாலையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.

சுற்றுலா தலமான லங்கா தீவில் இருந்து, 8 பேர் சிறிய ரக பீச் கிராஃப்ட் விமானத்தில் சிலாங்கூர் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அந்த விமானம் தரையிறங்குவதற்கு 2 நிமிடங்களுக்கு முன் கட்டுப்பாட்டை இழந்து, எல்மினா பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் மோதி தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர்களும், விமானத்தில் பயணித்த 8 பேரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments