மதுக்கடைகளால் வீட்டில் எந்தவொரு நிம்மதியும் இல்லை -அண்ணாமலையை சூழ்ந்து கொண்டு குமரி மாவட்ட பெண்கள் குமுறல்

0 1251

எங்கள் ஊருக்கு நல்லது செய்வதாக இருந்தால், முதலில், பிராந்தி கடைகளை அடையுங்கள், மதுக்கடைகளால் நிம்மதி இல்லை என, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சூழ்ந்து கொண்டு, கன்னியாகுமரி மாவட்ட பெண் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

என் மண், என் மக்கள் நடைபயணத்தை, இன்று 18ஆவது நாளாக அண்ணாமலை மேற்கொண்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமியார் மடத்தில் இன்றைய பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்கினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினர், பாதயாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.

நடைபயணம் கல்லுவிளை என்ற பகுதியை வந்தடைந்தபோது, அண்ணாமலை சூழ்ந்து கொண்ட, முந்திரி தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்கள், எவ்வளவு தான் உழைத்தாலும், மதுக்கடைகளால், வீட்டில் எந்தவொரு நிம்மதியும் இல்லை என, தங்கள் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments