பைலட் இறந்ததால் மியாமியிலிருந்து சிலி நோக்கி கிளம்பிய விமானம் நடுவானில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது

0 2160

அமெரிக்காவிலிருந்து சிலி நாட்டிற்குச் சென்ற விமானத்தில் நடுவானில் பைலட் இறந்ததால் விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

லட்டம் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 271 பயணிகளுடன் மியாமியிலிருந்து சிலி நோக்கி கிளம்பியது. விமானம் புறப்பட்ட 3 மணி நேரத்தில் பைலட்டும், விமான கேப்டனுமான இவான் அண்டெளரின் ((Andaur)) உடல்நிலை நலிவடைந்தது.

கழிவறையில் நிலைகுலைந்து விழுந்த இவானுக்கு பணிப்பெண்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் கோ-பைலட் உடனடியாக விமானத்தை பனாமா நாட்டில் தரையிறக்கினார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்து இவான் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

56 வயதான இவான் 25 ஆண்டுகள் பைலட்டாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments