கடற்படைக்கு உதவ 5 துணைக்கப்பல்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்...
இந்தியக் கடற்படைக்கு உள்நாட்டில் தயாரிக்கப்படும் கப்பல்களை 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வாங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கடற்படையில் பயன்படுத்த 5 புதிய கப்பல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தக் கப்பல்கள் கடற்படையினருக்குத் தேவையான எரிபொருள், உணவு , மருந்துகள் போன்றவற்றை சப்ளை செய்யும் துணைக் கப்பல்களாக செயல்படும்.
விசாகப்பட்டினத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனம் இந்தக் கப்பல்களை கட்டித் தரும்.
இத்திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments