தமிழ் உள்பட 15 இந்திய மொழிகளில் அரசுத் தேர்வுகளை நடத்த முடிவு - மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
இந்தி, ஆங்கிலம் தவிர தமிழ் உள்பட 15 இந்திய மொழிகளில் அரசுத் தேர்வுகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், இந்தி தவிர இந்திய மாநில மொழிகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் மொழித் தடையால் எந்த இளைஞரும் வேலை வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதற்காக 13 பிராந்திய மொழிகளில் வினாத்தாள் அமைக்கப்படும் என ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தி தவிர மற்ற மொழிகளில் எஸ்எஸ்சி தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த கோரிக்கைகள் தொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜிதேந்திரசிங் குறிப்பிட்டார்.
Comments