ஆருத்ரா மோசடி: போலீசாரின் புதிய வியூகம்
ஆருத்ரா வழக்கில் துபாயில் குடும்பத்துடன் பதுங்கிய அந்நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்டவர்களை பிடிக்க தமிழக காவல் துறை புதிய வியூகம் வகுத்துள்ளது.
துபாயில் பதுங்கியுள்ளதாக கருதப்படும் ராஜசேகர் உள்ளிட்டோரை பிடிக்க ஏற்கனவே லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி இன்டர்போல் மூலம் கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில், குற்றவாளிகளை கையகப்படுத்தவும், வழக்கின் தகவல்களைச் சேகரிக்கவும் இந்தியாவுக்கும் துபாய்க்கும் இடையே உள்ள எம்-லாட் என்று அழைக்கப்படும் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை பயன்படுத்திக் கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அந்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி ஆருத்ரா வழக்கு நடைபெறும் நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று, அதனை துபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள போலீசார், அவ்வாறு செய்யும் போது ராஜசேகர் உள்ளிட்டவர்களை துபாய் போலீசார் தங்களிடம் ஒப்படைக்கும் என்றும் கருதுகின்றனர்.
தமிழகத்தில் மோசடி செய்த 300 கோடி ரூபாயை ராஜசேகரனும் அவரது ஆட்களும் துபாயில் முதலீடு செய்துள்ளதாகவும், அதனை எம்-லாட் ஒப்பந்தம் மூலம் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments