எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு - ராணுவ அதிகாரிகளிடம் கண்ணீருடன் கேள்வி எழுப்பிய உயிரிழந்த வீரரின் மனைவி

0 4114

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் ஜெகதீஷ் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், அவரது கர்ப்பிணி மனைவி, தனது கணவரை ஏன் நன்றாக கவனித்துக் கொள்ளவில்லை என்று ராணுவ அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினார்.

டெல்லியில் கமாண்டோ படைப்பிரிவில் பயிற்சி பெற்று வந்த ஜெகதீஷின் உடலை ஒப்படைக்க வந்த அதிகாரிகளிடம் அவர் முறையிட்டார். ஜெகதீஷின் உடல் பின்னர் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments