திருக்காட்டுப்பள்ளி அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

0 1743

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் பிரபு மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருந்துவந்த பிரபு, பழமாநேரி சாலையில் உள்ள டெய்லர் கடை முன்பு இரவு  நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில், அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

இதில் சம்பவ இடத்திலேயே பிரபு உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் பிரபுவின் உடலை கைப்பற்றி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments