ராமகாதை உபன்யாசம் கேட்க வந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்.. பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்திருப்பதாக பேச்சு..!
தமது இந்து மத நம்பிக்கை, தன்னை மிகச்சிறந்த பிரதமராக செயல்பட நல் வழிகாட்டுவதாக, இங்கிலாந்து பிரதமர் ரிஷினி சுனக் தெரிவித்துள்ளார்.
ஆன்மீக தலைவரான மொராரி பாபு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராம கதை உபன்யாசம் செய்த நிகழ்வில் ரிஷி சுனக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்திய சுதந்திர தினத்தன்று ராம கதை நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெருமையாகக் கருதுகிறேன். நான் இங்கு பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன் என்று அவர் தமது உரையில் தெரிவித்தார்.
ராமாயணம், பகவத் கீதை மற்றும் அனுமான் சாலிசா ஆகியவற்றை நினைவு கூர்ந்த பிரதமர் ரிஷி சுனக் தனது உரையை ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் ஜெய் ஸ்ரீராம் என கூறியது குறிப்பிடத்தக்க்கது.
Comments