6 நாட்களில் ரூ 400 கோடிகள்... விக்ரம் படத்தின் வசூலை வேகமாய் எட்டிப்பிடித்த ஜெயிலர்..! திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி..!

0 31409

ஜெயிலர் படம் வெளியாகி ஆறே நாட்களில் உலக அளவில் 400 கோடி ரூபாய் வசூலை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

6 நாட்களில் ஜெயிலர் திரைப்படம் சர்வதேச அளவில் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்துள்ளதாக திரை விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் விக்ரம் படத்தின் மொத்த வசூலை ஜெயிலர் படம் அதிவேகத்தில் எட்டிப்பிடித்து விட்டதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

இந்திய அளவில் 300 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் வெளி நாடுகளில் மட்டும் 154 கோடிகளை 6 நாட்களில் வசூலித்திருப்பதாக கூறப்படுகின்றது.

ஜெயிலர் திரைப்படம் சர்வதேச அளவில் முந்தைய தமிழ் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை, தட்டி தூக்கி வருவதாக ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ரஜினி காந்த் இமயமலையில் உள்ள பாபாஜி குகையில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக தியானம் மேற்கொண்டுள்ளார்

2 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் நடந்து சென்று, இந்த தியானத்தை அவர் மேற்கொண்ட நிலையில் அவரது பாதுகாப்புக்கு போலீசாரும் உடன் சென்றுள்ளனர்



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments