நிலவின் உள்வட்டப் பாதையில் மேலும் இன்று தனது சுற்று தூரத்தைக் குறைக்க உள்ளது சந்திரயான் 3 விண்கலம்

0 5497

சந்திரயான் 3 விண்கலம், நிலவின் உள்வட்டப் பாதையில் மேலும் இன்று தனது சுற்று தூரத்தைக் குறைக்க உள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணியளவில் சந்திரயான் 3 விண்கலத்தை நிலவின் அருகே இஸ்ரோ விஞ்ஞானிகள் கொண்டு செல்ல உள்ளனர்.

ஏற்கனவே 14ம் தேதி வெற்றிகரமாக சந்திரயான் 3 தூரத்தைக் குறைத்திருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 14ம் தேதி இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை நிலவை நோக்கி செலுத்தியது. இன்று 4வது முறையாக நிலவின் உள்வட்டப்பாதையின் தூரம் குறைக்கப்படுகிறது.

இதையடுத்து ஆகஸ்ட் 23ம் தேதி விண்கலத்தில் இருந்து விக்ரம் என்ற லேண்டர் தனியாகப் பிரிந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கும். .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments