77ஆவது சுதந்திர தினவிழா தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்
நாட்டின் 77வது சுதந்திர தின விழா தமிழகம் முழுவதும் கோலகாலமாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேசியக்கொடி ஏற்றிவைத்தனர்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேசியக் கொடியேற்றி வைத்த ஆட்சியர்கள், காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர்.
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தேசியக் கொடியேற்றி வைத்த ஆட்சியர்கள், மூவர்ண பலூன்கள் மற்றும் சமாதான புறாக்களை வானில் பறக்கவிட்டனர்.
சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையில் சுதந்திர தின விழாவின் போது பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
கோவை, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காவல்துறையின் மிடுக்கான அணிவகுப்புடன் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கண்டு களித்தனர்.
திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சுதந்திர விழாவின் போது, சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள், அரசு அலுவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களிலும் அரசு அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர், அரியலூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சுதந்திர தின விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதே போல திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் சுதந்திர தின விழாக்கள் சிறப்பாக நடைபெற்றது.
Comments