வைகை எக்பிரஸ் ரயிலுக்கு 46ஆவது பிறந்தநாள் - கேக்வெட்டி கொண்டாடி மகிழ்ந்த பயணிகள்.

0 1158

வைகை எக்ஸ்பிரஸ் இயங்க துவங்கியதன் 46வது ஆண்டை ரயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

மீட்டர் கேஜ் ரயில் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்ற இந்தியாவின் அதி விரைவு ரயில், ஆசியாவிலேயே மீட்டர் கேஜில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் என்பன உள்ளிட்ட பெருமைகளை பெற்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில், 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கியது.

இதையொட்டி கேக் வெட்டிய பயணிகள், ரயில் ஓட்டுநர்களுக்கு மாலை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினர்.

சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் பகல் நேர விரைவு ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் இதுவரை ஒரு கோடியே 77 இலட்சத்து 30 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்துள்ளது.

இந்தியாவிலேயே முதன் முறையாக மீட்டர்கேஜில் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டது வைகை எக்ஸ்பிரஸில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments