தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. நீரை திறக்க முடிவு : டி.கே.சிவக்குமார்.
தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
பெங்களூருவில் பேட்டியளித்த அவர், கடந்த ஆண்டு உபரி நீர் வெளியேற்றியதில் 400 டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கே சென்றதாகவும், மேகதாது அணை இருந்திருந்தால் அதிலிருந்து அதிக தண்ணீர் தற்போது தமிழகத்திற்கு கொடுத்திருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
இதனை புரிந்துகொண்டு அணை கட்ட தமிழகம் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். போதிய தண்ணீர் இல்லாத சூழலிலும், தமிழ்நாட்டிற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணீரை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
தற்போது வறட்சி காலத்தில் இரு மாநிலங்களுக்கும் இடைய பிரச்சனை வேண்டாம் என்றும் போதுமான அளவு மழை பெய்தால் தேவையான தண்ணீர் வெளியேற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments