அரசு மருத்துவமனை செல்லும் மக்களின் உயிரே போகும் நிலை : இ.பி.எஸ்.

0 1144

சமீப காலமாக அரசு மருத்துவமனைக்கு, சாதாரண நோய்களுக்கு செல்லும் மக்களின் கை, கால் போவதுடன் உயிரும் போகும் அவலம் நிலவுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 வயது ஆண் குழந்தையை பரிசோதிக்காமல், வெறி நாய்க்கடிக்கான சிகிச்சை அளித்த சம்பவத்தை அறிக்கை ஒன்றில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் சளிக்கு நாய்க்கடி ஊசியும், உண்மையிலேயே நாய்க்கடி என்றால் அதற்கான ஊசி இல்லாத நிலையும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தசைப் பிடிப்புக்குச் சென்ற மாணவி காலை இழந்து, உயிரையும் இழந்ததையும், கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவத்தையும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் கிடைக்காத நிலையில், சுகாதார அமைச்சருக்கு ஓட்டப் பந்தயங்களைத் துவக்கி வைக்கவே நேரம் போதவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.

இனியாவது, சுகாதாரத் துறை அமைச்சர் தமது துறையில் முழு கவனம் செலுத்தி, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments