சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா....பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு விருது

0 1050

சென்னை சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

தமிழ் வளர்ச்சிக்காக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.

ஐ.பி.எஸ். அதிகாரி அஸ்ரா கர்க் மதுரையில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பாகப் பணியாற்றியதற்காக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ், கோயம்புத்தூர் மாவட்ட மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையர் மா.குணசேகரன், நாமக்கல் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சு.முருகன் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முதல்நிலைக் காவலர் ஆர்.குமார் ஆகியோருக்கும் முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது.

மகளிர் நலன், இளைஞர் நலன், சிறந்த மாநகராட்சி, சிறந்த பேரூராட்சி, சிறந்த ஊராட்சி என பல்வேறு பிரிவுகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments