இந்திய சுதந்திர தினம் வரலாறும் பெருமையும்.!
இந்தியாவை ஆண்ட மாமன்னர்கள், ராஜபுத்திரர்கள், சேர சோழ பாண்டியன்கள் என்று வரலாற்றில் நாம் எத்தனையோ படித்திருப்போம்....பின்னர் சில நூற்றாண்டுகளாக மொகலாயப் பேரரசுகள் ஆட்சி புரிந்தன. கடைசியாக பிரிட்டன் காலனியாதிக்க அரசின் கீழ் மாகாணங்களாக பிரிந்து இருந்த இந்திய தேசம் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்தியாவுக்கு சுதந்திரம் பெற வேண்டி எண்ணற்ற உண்ணாவிரதம் மற்றும் அறவழி அகிம்சைப் போராட்டங்கள் நடைபெற்றன. வெள்ளையனே வெளியேறு இயக்கம் வீறுகொண்டு எழுந்தது. சுதேசி பொருட்களுக்கான இயக்கமும் வளர்ந்தது. அந்நியப் பொருட்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, சர்தார் வல்லபபாய் பட்டேல், நேகாஜி, பகத் சிங் உள்ளிட்ட பல தலைவர்களின் தியாக பூமியாக இந்தியா மாறியது.
வீர சுதந்திரம் வேண்டி நின்றால் வேறொன்றைக் கொள்வாரோ என்று பாரதியார் பாடி வைத்தார்.
1947ம் ஆண்டு முகமது ஜின்னாவின் விருப்பப்படி பாகிஸ்தான் இஸ்லாமிய தனிநாடாகப் பிரிந்து சென்றதையடுத்து இந்தியா என்ற தேசம் இதே நாளில் நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது....
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாக 1952ம் ஆண்டில் இந்தியக் குடியரசு உருவானது. எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு...நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு என்ற பாரதியின் காவியக் கனவுகள் நனவாகின.
இந்தியா தன்னிகரற்ற நாடாக பொருளாதாரம், கலாச்சாரம் ,தொழில்நுட்பம், அறிவியல் ஆன்மீகத்தில் வளர்ந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அண்டை நாடுகளுடன் போர்கள் நடத்திய போதும் அணு ஆயுத நாடாக வளர்ந்து, முதல் தாக்குதலை தொடுப்பதில்லை என்ற கொள்கையுடன் உலகில் தனி மரியாதை பெற்றது.
விவசாயம், தொழில் ,கல்வி, விண்வெளி ஆய்வு , என்று அனைத்துத் துறைகளிலும் இந்தியா இன்று உலகின் வழிகாட்டியாக திகழ்கிறது.
இந்தியா இன்று 77வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதையொட்டி நாட்டின் முக்கியக் கட்டடங்கள் மூவர்ணங்களின் மின்னொளியால் ஜொலிக்கின்றன. வண்ணங்கள் வேறாயினும் எண்ணங்களில் ஒன்றுபட்டு இந்தியா என்ற நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது.
Comments