மதுவை தட்டிவிட்ட நண்பரை கொன்ற நண்பர் கைது ...

0 1627

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மது விருந்தின் போது மதுவை தட்டி விட்ட தகராறில் நண்பரை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் அடுத்துள்ள கல்லம்பலத்தை சேர்ந்தவர் ராஜூ.

இந்த நிலையில் மாவின்மூடு என்னும் இடத்தில் உள்ள குளத்தில் அவரது உடலை போலீசார் கைப்பற்றி கொலை செய்யப்பட்டிருகக்லாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

இதில் அவரது நண்பர் சுனில் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாம் மாவின்மூடில் மது விருந்துக்காக வந்திருந்த போது தமக்கு வைக்கப்பட்டிருந்த மதுவை தட்டிவிட்டதால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் மாலை நேரம் குளத்தில் குளிக்க வந்த போது தமக்கும் ராஜூவுக்கும் இடையில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் ராஜூவை குளத்துக்குள் மூழ்கடித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து சுனிலை போலீசார் ஆற்றிங்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments