7 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து முதன்மைச் செயலாளர் உத்தரவு
7 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், குற்ற ஆவண காப்பாக எஸ்பியாக இருந்த கலைச்செல்வன் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு எஸ்பியாகவும், பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு எஸ்பி எஸ்.எஸ்.மகேஸ்வரன், நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த நாகஜோதி இடமாற்றம் செய்யப்பட்டு குற்ற ஆவண காப்பக காவல் கண்காணிப்பாளராகவும், சேலம் நகர தெற்கு துணை ஆணையர் ராஜராஜன், இடமாற்றம் செய்யப்பட்டு கோவை போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Comments