பள்ளிகளில் ஆசிரியர்களின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என திமுக உறுப்பினர் பேச்சு

0 1304

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சம்பவத்தைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்றிய, ஊராட்சிப் பள்ளிகளைக் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தில் பேசிய 13 வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பகவத்சிங் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய நக்கனேரி பகுதியைச் சேர்ந்த 11வது வார்டு திமுக கவுன்சில் அனுசுயா, பள்ளிகளில் ஆசிரியர்களின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாமல் உள்ளது என குற்றச்சாட்டை முன் வைத்தார்.

தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள், ஒரே பள்ளியில் 5, 6 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த ஆசிரியர்கள் இருப்பதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நெருக்கம் ஏற்பட்டு இது போன்ற பிரச்சினை நடக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறினர்.

எனவே 3 ஆண்டுகளுக்கு மேல் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments