அந்த 25 லாரிகள் வெடித்தால் சென்னையில் ஒரு பகுதி தரமட்டமாயிருமாம் மக்களே..! வெடிபொருள் லாரிகள் பதுக்கல்..!

0 3781

நாக்பூரில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்ட 250 டன் எடையுள்ள வெடிபொருட்களை ஏற்றி வந்துள்ள 25 கண்டய்னர் லாரிகள் மணலிபுது நகர் பகுதியில் உள்ள சட்டவிரோத கண்டெய்னர் யார்டில் மறைத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அண்மையில் ஒரு ரசாயண குடோன் தீப்பற்றி எரிந்த நிலையில் அடுத்த ஆபத்து நிகழும் முன்பாக வெடி பொருட்களுடன் நிறுத்திவைக்கப்பட்டுள்ள லாரிகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி புது நகரில் பெயிண்ட் கம்பெனி என்ற பெயரில் சட்ட விரோதமாக இயங்கி வந்த ரசாயண குடோன் தீப்பற்றி எரிந்த காட்சிகள் தான் இவை..!

இதனை விட பல மடங்கு ஆபத்தான வெடி பொருட்களுடன் 25 லாரிகள் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள ரகசிய கண்டெய்னர் யார்டில் மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வந்த புகார்களையடுத்து நமது செய்தியாளர் அங்கு சென்றார்...

அந்த கண்டெய்னர் யார்டில் இருந்த ஓட்டுனரிடம் விசாரித்த போது, லாரிகளில் உள்ள கண்டெய்னர்களில் டன் கணக்கில் வெடிபொருட்கள் இருப்பதாகவும் ஒரு லாரியில் குறைந்த பட்சம் 10 டன் எடையுள்ள வெடி பொருட்கள் இருப்பதாக தெரிவித்தார்

புகைப்பிடிக்க கூடாது, செல்போன் பயன் படுத்தக்கூடாது என்ற வாசகங்கள் அந்த வெடி பொருட்கள் இருந்த கண்டெய்னர்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் யார்டு உரிமையாளரான சுகுமாரன் என்பவரை தொடர்பு கொண்டு கேட்ட போது, நாக்பூரில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்ட வெடிபொருட்கள் என்று தெரிவித்த அவர் தான் சட்ட விரோதமாகத்தான் அந்த வெடி பொருட்கள் நிரப்பட்ட லாரிகளை நிறுத்தி வைத்திருப்பதை ஒப்புக் கொண்டார்

அந்த லாரிகளில் உள்ள வெடி பொருட்கள் மலைகளை உடைப்பதற்காக பயன் படுத்தக்கூடியவை என்று கூறிய சுகுமாரன், நாக்பூரில் இருந்து கொச்சி, விசாகப்பட்டினம், சென்னை துறைமுகத்துக்கு மட்டுமே இந்த வெடிபொருட்கள் லாரிகள் செல்வதாகவும், வெடிபொருட்கள் ஏற்றப்பட்டபின் வழியில் எங்கும் அந்த கண்டெய்னரை இறக்க கூடாது என்றும் நேரடியாக கப்பலில் தான் ஏற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்

இந்த வெடி பொருட்கள் ஏற்றப்பட்ட லாரிகளை தமிழகத்தில் எங்கும் நிறுத்தி வைக்க கூடாது என்று வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ள நிலையில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இந்த எக்ஸ்புளோசிவ் லாரிகள் வெடித்தால் சென்னையின் ஒரு பகுதியே தரை மட்டமாகிவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments