செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், அவரது மனைவி, மாமியாருக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளன: அமலாக்கத்துறை
குற்றச்செயல்கள் மூலம் ஈட்டிய பணத்தை மாற்றுவதில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், அவரது மனைவி மற்றும் மாமியார் முக்கிய பங்காற்றியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், 4 முறை சம்மன் அனுப்பியும் பொருத்தமற்ற காரணங்களை மேற்கோள்காட்டி, அசோக் குமார் விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அசோக்கின் மனைவி நிர்மலா, மாமியார் லட்சுமி ஆகியோர் 4 முறை சம்மன் அனுப்பியும் தங்கள் முன் விசாரணைக்கு ஆஜராகவில்லை என அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர்.
அம்மூவருக்கும் வழக்கில் தொடர்பு இருப்பதற்கு உரிய ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, அசோக் குமார் உள்ளிட்டோர் இதுவரை தடுப்பு காவலில் வைக்கப்படவோ, கைது செய்யப்படவோ இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
Comments