உயர்கல்வித்துறை சார்பில் ரூ.87 கோடியில் கட்டப்பட்ட கல்விசார் கட்டடங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர்
தமிழக உயர்கல்வித்துறை சார்பில் 87 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பல்வேறு கல்விசார் கட்டடங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெல்லை, நாமக்கல், கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள், விடுதிகள், கருத்தரங்குக் கூடம் போன்றவை திறந்து வைக்கப்பட்டன.
அறநிலையத் துறை சார்பில் கோயில்களில் கட்டப்பட உள்ள திருமண மண்டபம், திருக்குளப் பணிகள், பக்தர்கள் தங்கும் விடுதி, உணவருந்தும் கூடம் போன்றவற்றுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். 2 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 962 கோயில்களில் 3 ஆயிரத்து 373 கோடி ரூபாயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பேராசிரியர் மா. நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது மனைவியிடம் 10 லட்ச ரூபாய் நூலுரிமை தொகைக்கான காசோலையையும் முதலமைச்சர் வழங்கினார்.
Comments