இந்தியா சீனா ராணுவத் தளபதிகளிடையே இன்று 19 வது சுற்று பேச்சுவார்த்தை...

0 1175

இந்தியா சீனா ராணுவத் தளபதிகளிடையே இன்று 19 வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 18வது சுற்றுப் பேச்சுவார்த்தை லடாக்கையடுத்து உள்ள சீன எல்லைப் பகுதியான சுசுல் மோல்டோ பகுதியில் நடைபெற்றது.

சுசுலின் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

ஷாங்காய் கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு, ஜி 20 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகள் அடுத்த ஒருமாதத்தில் நடைபெற உள்ள சூழலில் இந்தியா-சீனா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் எல்லைப் பிரச்சினைக்கு சுமுகத்தீர்வு காண இந்தப்பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன .

லடாக் எல்லையில் சீன ராணுவம் சுமார் 60 ஆயிரம் வீரர்களைக் குவித்துள்ளது. படைக்குறைப்பையும் எல்லையில் அமைதியையும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

தஸ்பக் மற்றும் டெம்சோக் பகுதிகளில் படைகளைக் குறைக்க இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதும் சீனா அதற்கு இதுவரை இணங்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments