மயிலாடுதுறையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருவதாக கூறும் விவசாயிகள் மாவட்டத்தில உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களையும் திறந்து, ஈரப்பதத்தை கருத்தில் கொள்ளாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 15 சதவீதம் அறுவடை பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் மழை நீரால் சூழப்பட்டன.
அதனை விவசாயிகள் வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் தொடர்ந்து இரவு நேரங்களில் பெய்யும் மழையால் விவசாயிகள் அறுவடை பணியை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாதிப்புக்கு உள்ளான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments