கடலூரில் மது அருந்தியவர் வாயில் ப்ரீத் அனலைசரை வைத்ததும் ஊது....ஊது.. என பின்பாட்டு பாடிய போலீசார்

0 7220

கடலூர் மாவட்டத்தில் மது அருந்திவிட்டு ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்த போலீசார் அவரிடம் ப்ரீத் அனலைசர் கருவியைக் காட்டி ஊதச் சொல்லி மன்றாடினர்.

நகரப் பகுதியில் அங்குமிங்கும் போக்குக் காட்டிய ஆட்டோ ஓட்டுநர், தனது ஆட்டோவின் வயர்களைப் பிடுங்கி விட்டு பழுதாகி நின்றதாகக் கூறினார்.

ஆனால் அவரை விடாத போக்குவரத்து போலீசார், பிரீத் அனலைசர் கருவியைக் கொடுத்து ஊதச் சொன்னதும் அமைதியாக நின்ற ஆட்டோ ஓட்டுநரைக் கண்டு ஒன்றும் செய்வதறியாது விழித்தனர்.

பின்னர் அவரிடம் எப்படி ஊதுவது என விளக்கம் கொடுத்த பின், அவர் வாயில் ப்ரீத் அனலைசரை வைத்ததும் ஊது....ஊது....ஊது என தாங்களும் பின்பாட்டு பாடினர்.

ஒருவழியாக அவர் குடித்திருப்பதை உறுதி செய்த பின்னர், ஆட்டோவைப் பறிமுதல் செய்து, ஆட்டோ ஓட்டுநரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments