நாடெங்கும் நாளை 77வது சுதந்திர தினக் கொண்டாட்டம்
இந்தியா தனது 77 வது சுதந்திர தினத்தை நாளை கொண்டாடுகிறது.
டெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினக் கொண்டாட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
அப்போது ஹெலிகாப்டர்கள் மூலம் பூமழை தூவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முப்படை அணிவகுப்பை பார்வையிட்டு பிரதமர் சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.
இவ்விழாவுக்கு 1800 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
75 ஜோடிகள் பல்வேறு கலாசார பண்பாடுகளை சித்தரிக்கும் வகையில் ஆடை அணிகலன்களுடன் விழாவில் பங்கேற்கின்றனர்.
மேலும் நூற்றுக்கணக்கான ஊராட்சித் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தொழில்துறையினர் சுதந்திர தினவிழாவில் பங்கேற்க உள்ளனர்.
டெல்லியில் சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்தியா கேட், பிரகதி மைதானம், புதுடெல்லி ரயில் நிலையம், தேசிய போர் நினைவுச் சின்னம், மெட்ரோ நிலையங்கள் உள்பட 12 இடங்களில் செல்பி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் மூவர்ணக் கொடியுடன் மக்கள் செல்பிகளை எடுத்து இணையதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்
Comments