இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான விந்தியகிரி போர்க்கப்பல் ... இந்தியக் கடற்படைக்கு வழங்குகிறார் குடியரசுத் தலைவர்
இந்திய கடற்படைக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட விந்தியாகிரி கடற்படைக் கப்பலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ கொல்கத்தாவில் வரும் 17ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள விந்திய மலைத் தொடரின் நினைவாக இந்தக் கப்பலுக்கு விந்தியகிரி என்று பெயரிடப்பட்டுள்ளது.
பிராஜக்ட் 17 ஏ பிரிகேட்ஸ் வரிசையில் இது இந்தியக் கடற்படையில் இணைக்கப்படும் ஆறாவது போர்க் கப்பலாகும்.
தாக்குதல் தொடுத்தல், ஆயுதம் தாங்கிகள், சென்சர் கருவிகள் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.
முன்பு விந்தியகிரி என்ற பெயரில் இருந்த கப்பல் 31 ஆண்டுகளுக்குப் பிறகு 2012ம் ஆண்டில் தனது சேவையை முடித்துக் கொண்டதையடுத்து அதன் தொடர்ச்சியாக புதிய விந்தியகிரி கப்பல் கடற்படைக்கு வழங்கப்படுகிறது.
Comments