ரஷ்ய படைகளிடமிருந்து பாம்புத் தீவை மீட்டு தேசியக்கொடியை ஏற்றிய உக்ரைன் வீரர்கள்

0 1656

கருங்கடலில் உள்ள பாம்புத் தீவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்த உக்ரைன் ராணுவத்தினர், தேசியக்கொடியை அங்கு ஏற்றிவைத்தனர்.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியபோது பாம்புத்தீவை சுற்றிவளைத்த ரஷ்ய கடற்படை, உக்ரைன் வீரர்கள் சரணடையுமாறு ரேடியோ மூலம் கெடு விதித்தனர்.

ரஷ்ய படைகளை ஆபாசமாகத் திட்டிய உக்ரைன் வீரர்கள் சரணடைய மறுத்து வீரமரணம் அடைந்தனர். அப்போது உக்ரைன் வீரர் ரஷ்ய படைகளைத் திட்டிப் பேசியப் பதிவு உலகளவில் பிரபலமானது.

பாம்புத்தீவை மீட்க உக்ரைன் படைகள் நடத்தியத் தொடர் தாக்குதலால் பெரும் இழப்புகளை ரஷ்ய படைகள் சந்தித்த நிலையில், நல்லெண்ண அடிப்படையில் அங்கிருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments